தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 23, 2019

முஸ்லிம்கள் பற்றி பிழையா பேசிய அஸ்கிரிய தேரர், திசை மாறினார்..!

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய உண்மையாக குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்காவிட்டால் அரசாங்கம் மக்களின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை என்று அஸ்கிரிய பீட மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்தார். 

தான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக வெளியாகிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவிப்பதற்காக அவர் விடுத்த விஷேட அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அந்த அறிவிப்பில் அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது : 

அண்மையில் என்னால் சொல்லப்பட்ட போதனையை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அதன் போது நான் ஐக்கிய தேசிய கட்சி குறித்தும், முஸ்லிம் மக்கள் குறித்தும் கூறிய விடயங்கள் மக்கள் மத்தியில் அதிகம் பேசுபொருளாகியுள்ளன. 

எமக்கு அரசாங்கத்தின் மீதோ, முஸ்லிம் மக்கள் மீதோ எந்த கோபமும் கிடையாது. நாட்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நீண்ட காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். எதிர்காலத்திலும் இதே போன்று அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

மதகுருமார்கள் என்ற ரீதியில் நாட்டையும், மக்களையும், ஆகமங்களையும் பாதுகாப்பதை மட்டுமே எம்மால் செய்ய முடியும். எம்மிடம் எவ்வித கட்சி பேதமோ அல்லது மத பேதமோ கிடையாது. எனத் தெரிவித்தார்.

Post Top Ad

Your Ad Spot

Pages