மீண்டும் அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய எந்தவொரு சந்தர்பத்திலும் தயார் : கபீர் ஹசீம்

அமைச்சு பதவிகளை கைவிட்டு செய்த அர்ப்பணிப்பை மீண்டும் எந்தவொரு சந்தர்பத்திலும் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். 

மாவனெல்ல, கல்கந்த பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படும் சவால்களை தடுப்பதற்காக சில முஸ்லிம் அமைச்சர்கள் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் மக்கள், நாடு மற்றும் கட்சி தொடர்பில் எண்ணியே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியோகவும் அதனையை சிலர் தவறான முறையில் சித்தரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...