தெரிவுக்குழுவில் இருந்த ஹக்கீம் விலகவும் - பொதுஜன பெரமுன

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒப்பந்தங்களை செய்திருந்ததாக ஹிஸ்புல்லாஹ் கூறியிருப்பதால் , ஈஸ்ரர் தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து ரவூப் ஹக்கீம் விலக வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கோரியுள்ளது.

அந்தக் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரோஹித அபேகுணவர்தன எம்பி இதனை தெரிவித்தார்.!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...