தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 22, 2019

முஸ்லிம்களின் போராட்டம் மெளன போராட்டமாக தொடரும்: ஹரீஸ் எம்.பி

தமிழ் மக்களால், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது ஆனால் அங்கு சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பும் என அறிவித்துள்ளனர். 


இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் போராட்டமும் கைவிடும் நிலைக்கு அல்லது மெளன போராட்டமாக முஸ்லிம் சமூகமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது கல்முனை செய்திகள் தெரிவிக்கின்றன.  

இன்று மாலை முஸ்லிம் மக்களின் போராட்ட களத்திலிருந்து கருத்து தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கருத்து தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், 

இச்சர்ச்சை தொடர்பில் தெளிவான கலந்துரையாடல்கள், வட்ட மேசை கலந்துரையாடலாக நாம் இனி செயற்படப் போவதாகவும் .  இதற்கான தீர்வினை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முஸ்லிம்களின் போராட்ட களத்திலிருந்து அறிவித்துள்ளார். 

மேலும், தமிழ் மக்கள் மனம் நோகும் படி எந்த முஸ்லிம் சமூகத்தினரும் பேச வேண்டாம் எனவும், அவர்கள் தொடர்பில் பிழையான வார்த்தைகளை சமூக ஊடகங்களில் இடவேண்டாம் எம் சமூகம் அவ்வாறு செயற்படும் சமூகமில்லை இருந்தும் இங்கு பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதாகவும், தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தின் போராட்டம் மெளன போராட்டமாக தொடரும் எனவும் அறிவித்துள்ளார். 

முஸ்லிம் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் இவ்விவகாரம் தொடபில், தீர்வுகாண்பதற்காக செயற்படுவார்கள் எனவும் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன் என்று தெரிவித்தார். 

Post Top Ad

Your Ad Spot

Pages