கல்முனையில் தமிழ்-முஸ்லிம் போராட்டங்கள் வலுவான நிலையில் !!கல்முனையில் கடந்த ஐந்து நாட்களாக இடம்பெற்றுவரும் உண்ணாவிரத போராட்டம் சட்டப்படி அங்கிகாரம் இல்லாத ஒன்று எனக்கோரி கல்முனை பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் ஒரு சத்தியாகிரக போராட்டம் நேற்று கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் உலமாக்கள், பள்ளிவாசல்கள் தலைவர்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.ரகீப், காரைதீவு,நிந்தவூர், அட்டாளைசேனை,நாவிதண்வெளி, பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் பிரதி தவிசாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்,கல்முனை அபிவிருத்தி குழு இணைத்தலைவர் எம்.எஸ்.ஏ.ரஸாக், மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, பிரதேசங்களை சேர்ந்த பொதுநல அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். 


நேற்றைய தினம் காலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கல்முனை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்றுவரும் உண்ணாவிரத பந்தலில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சங்கைக்குரிய அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாலேந்திரன் ஆகியோர் உண்ணாவிரதம் மற்றும் சத்தியாகிரகம் இடம்பெறும் இடங்களில் போராட்டம் செய்து வரும் மக்களின் தேவைகள் பற்றி ஆராயும் பேச்சுவார்த்தை ஒன்றை கல்முனை மாநகர சபை மண்டபத்தில் முஸ்லிம் தரப்பினரை சந்தித்து ஈடுபட்டனர். 


அந்த பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிந்ததும் முஸ்லிம் மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் அமபாறை மாவட்ட முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள்,பொது அமைப்புக்கள் சத்தியாகிரக பந்தலில் அமர்ந்து தமது ஆதரவை இரண்டாவது நாளாகவும் தெரிவித்துவருகிறார்கள். கலந்து கொள்ளும் பிரமுகர்கள் எல்லோரும் இப்போது ஊடகங்களை சந்தித்து தமது பக்க நியாயங்களை முன்னிறுத்தி பேசி வருகிறார்கள் 

நூருல் ஹுதா உமர்

கல்முனையில் தமிழ்-முஸ்லிம் போராட்டங்கள் வலுவான நிலையில் !! கல்முனையில் தமிழ்-முஸ்லிம் போராட்டங்கள் வலுவான நிலையில் !! Reviewed by NEWS on June 21, 2019 Rating: 5