தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 16, 2019

“டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்”! ஷிப்லி பாரூக்

அரசியல் எனக்கு சரிப்பட்டு வருமா?
“டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்”!!!!!

முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் மாகான சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்கின் பதிவு 
2015 பொதுத்தேர்தலுக்குமுன் எனது மிக நெருங்கிய வைத்திய நன்பரிடம் இருந்து ஓர் அழைப்பு வந்தது “மச்சான் நீ அரசியலுக்குள்ள வந்த மாதிரியே இன்னுமொரு என்னுடைய சக வைத்திய நன்பர் அரசியலுக்குள் இழுப்பதற்கான பலத்த முயற்ச்சி நடைபெறுகின்றது.

அந்த வைத்தியர் உன்னோடு கொஞ்சம் பேசனுமாம் உன்னுடைய mobile numberஅ கொடுக்கயா?மச்சான்” அதற்கு ஆம் என்று எனது சம்மதத்தை தெரிவித்தேன் ஒரு மணி நேர இடைவெளியில் ஒரு அறியாத இலக்கத்தில் இருந்து ஓர்அழைப்பு வந்தது “ அஸ்ஸலாமு அலைக்கும்” நான் டாக்டர் சாபி பேசுகிறேன் Engineer சிப்லி பாறுக்கா பேசிறிங்க? நன்பன் xxxxx டாக்டர் கதைத்தாரா?

எனக்கு மிகவும் தடுமாற்றமாக இருக்கிறது இம்முறை பொதுத்தேர்தலில் நான் இறங்க வேண்டும் என்று xxxx கட்சியால் எனக்கு பலத்த அழுத்தமான அழைப்பாக உள்ளது என்னுடைய நிலைமையில் இருந்துதான் நீங்களும் அரசியலுக்குள் வந்ததாக நண்பன் டாக்டர் xxxxx சொன்னார் இந்த politics நமக்கெல்லாம் சரிப்பட்டுவருமா? என்று கேட்டார் அவருக்கு இந்த அரசியல் பற்றிய எனது சிறிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டேன்.

1. Politics இல் ஈடுபடுவதென்றால் கண்ணாடிப்பெட்டிக்குள் வாழ்வது போன்றது.

2. நல்லது செஞ்சா வரவேற்பு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது .

3. இருக்கிற முக்காவாசி சொத்த அளிச்சித்தான் நேர்மையான அரசியல் செய்ய வேண்டும்.

4. கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி அதற்கப்புறம் நீ யாரோ நான் யாரோ செய்யிறதுக்கெல்லாம் இங்கு பிரதிபலன் எதிர்பார்க்கக்கூடாது.

5. உங்களை அரசியலுக்கு இழுக்கிற ஆளே உங்கட எதிரியா மாறலாம்.

6. குடும்பம், பிள்ளைகள், மனைவி என்றெல்லாம் சிந்தித்து அவர்களுக்கு நேரம் ஒதுக்கிக்கொண்டு இந்த வேலைய செய்ய முடியாது.

7. நடுச்சாமத்தில call எடுத்து hello என்று சொன்னதற்கு பிறகு என்ன sir தூக்கமா? என்று கேட்பார்கள் அதற்காக “தூங்கினால் எப்படி உங்களுக்கு பதில் சொல்லியிருப்பேன்” என்று நீங்கள் அவரிடம் கேட்கமுடியாது பொறுமையாக அவருடைய பிரச்சினையை கேட்டு அதற்குரிய ஆறுதலான பதிலை நீங்கள் சொல்லிவிட்டு தூங்க வேண்டும் அல்லது சில சமயங்களில் அந்தப்பிரச்சினையை நடுநிசியிலும் எழுந்து சென்று தீர்த்துவைக்கவும் வேண்டும்.

8. நாம் செய்ததை எல்லாம் மக்கள் ஞாபகம்வைத்திருக்கும் என்று ஒருபோதும் நினைத்துவிடக்கூடாது.

9. உங்கள் வாழ்க்கை ஓர் இயந்திர வாழ்க்கையாக மாற்றம் பெறும்.

இப்படி எத்தனையோ விசயத்தை சொன்ன நான் இந்த நல்லாட்சி உங்களை சிறையில் அடைத்து பின்பு உங்கள்மீதான குற்றத்தை மக்களிடம் இருந்து கோரும் என்பதை சொல்லத்தெரிந்திருக்கவில்லை “டாக்டர் சாபி என்னை மன்னித்துவிடுங்கள்”. நமக்கு அரசியல் சரிப்பட்டுவராது என்று இன்னும் நான் உங்களுக்குச் சொல்லவில்லை.

பொறியியலாளர் ஷிப்லி பாரூக்,
காத்தான்குடி நகர சபை உறுப்பினர்

Post Top Ad

Your Ad Spot

Pages