சஹ்ரானின் மனைவி, கல்முனை நீதிமன்றில் ஆஜர்

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி, தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி இன்று காலை கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டு வெடிப்பிற்கு முன்னர், ஸஹ்ரானின் குழு சிலருக்குப் பணம் வழங்கியதாகவும், அவர்கள் யார் என்பதை தன்னால் அடையாளம் கட்ட முடியும் என ஸஹ்ரானின் மனைவி கூறியதற்கு இணங்க இவர் இன்று கல்முனை நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் உள்ள சிலருடன் சஹ்ரானிற்கு பணக்கொடுக்கல் வாங்கல் இருந்ததாக அவர் விசாரணையில் தெரிவித்தார்.
பாறுக் ஷிஹான்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...