தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 14, 2019

வவுணதீவில் பொலிஸார் கொலை : பிரதான சூத்திரிதாரி மொஹம்மட் மில்ஹான்

மட்டக்களப்பு, வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரிதாரி மொஹம்மட் மில்ஹான் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவனான பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிமுடன் மிக நெருக்கமான தொடர்பை மில்ஹான் பேணி வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளன.

இந்நிலையில், மொஹம்மட் மில்ஹான் உட்பட ஐவர் துபாயில் கைது செய்யப்பட்டு இன்று (14) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages