மாதவிடாய் நப்கின்: ஷாபியின் மகள்களை குறிவைத்த சிங்கள இனவாத ஊடகம் திவயின

குருநாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் “திவயின” பத்திரிகை, அதன் தொடராக வைத்தியர் ஷாபியின் மகள்களை குறிவைத்து மற்றுமொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

வைத்தியர் ஷாபியின் இருமகள்களும், மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களை (Sanitary Napkin) பாடசாலை மாணவிகளுக்கு வழங்கியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியாளர் மனோஜ் அபேதீரவினால், ஜூன் 16 ஆம் திகதி “ஞாயிறு திவயின” பத்திரிகையிலேயே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Dr.ஷாபியின் மகள்களினால், அவர்கள் கல்வி கற்கும் பாடசாலை மாணவிகளுக்கு இந்த மாதவிடாய் நாப்கின்கள் இலவசமாகப் பகிரப்பட்டுள்ளது எனவும் பாடசாலை மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் இந்த விடயம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதனால் அவர்கள் அச்சத்துடனும் குழப்பத்துடனும் இருப்பதாகவும் மனோஜ் அபேதீர அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகையில் எழுதும் அளவுக்கு மாதவிடாய் நாப்கின்கள் பகிரப்பட்டுள்ளது என்றால், இந்த செய்தியின் அடிப்படையில் பார்க்கும் போது, Dr.ஷாபியின் மகள்கள் இருவரும் பைகள் நிரம்ப நாப்கின்களை எடுத்துக்கொண்டு, பாடசாலையின் ஒவ்வொரு வகுப்பு வகுப்பாகச் சென்று நண்பர்கள் மத்தியில் அவற்றைப் பகிர்ந்துள்ளனர் போன்றே கற்பனை செய்யத் தோன்றுகின்றது.

இந்த விடயம் குறித்து Dr.ஷாபியின் மனைவி, வைத்தியர் நசீர் பாத்திமா இமாரா கூறியதாவது,

"எனது இளைய மகள் தரம் 5 இல் கல்வி கற்கிறார். சானிடரி நாப்கின் என்றால் என்னவென்று கூட அவருக்கு தெரியாது. மூத்த மகளுக்கு தற்பொழுது 15 வயதாகிறது. ஒருநாள் அவருடைய வகுப்பு மாணவி ஒருவர் நாப்கின் ஒன்றை கேட்டதினாலேயே அவர் அதனை கொடுத்துள்ளார். ஏற்கனவே 02 பேரிடம் அவர் நாப்கினை கேட்டதன் பின்னரேயே மூன்றவாதாக எனது மகளிடம் கேட்டுள்ளார். இவ்வாறனதொரு சம்பவம் ஒருதடவை மாத்திரமே நடந்துள்ளது.”என்றார்.

இவ்வளவு காலமும் வைத்தியர் ஷாபியின் பின்னால் அலைந்து திரிந்த இந்த தரம்கெட்ட ஊடகவியலாளர் குழுவினர், அவர்களது பொய் செய்திகளினால் ஏற்பட்ட அவமானத்திலிருந்து மீள முடியாமல் தற்பொழுது ஷாபியின் மகள்கள் இருவர் மீதும் பொய்க் குற்றச்சாட்டுக்களை சோடித்து அவர்களை குறிவைத்து தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.

இனவாதிகள் தமது இலக்குகளை அடைந்துகொள்வதற்காகவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கும் எந்தவொரு எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இந்த விடயம் ஒரு சான்றாகும். அதில் பிள்ளைகள் என்ற வேறுபாட்டுக்கு இடமில்லை.

தெலீடர்,நிலவரம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்