பிக்குமார் சிலருக்கு அறிவுரை வழங்கப்பட வேண்டும்; ஹர்ச டி சில்வா

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை கூறிய தேரருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.அஸ்கிரிய பீடத்தின் சியாம் பிரிவு பிரதம குரு வரக்காகொட ஸ்ரீ ஞானரட்ன தேருக்கு எதிராகவே இவ்வாறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சிங்களவர்கள், முஸ்லிம்களின் வியாபார தளங்களை புறக்கணிக்க வேண்டும். சர்ச்சைக்குரிய வைத்தியரை கல்லெறிந்து கொல்ல வேண்டும் போன்ற கருத்துக்களை அந்த பௌத்த பிக்கு வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் அமைச்சர் ஹர்ச டி சில்வா தனது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறும் போது காவியுடை அணிந்துள்ள பௌத்த பிக்குமார் சிலருக்கு அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பௌத்த மதம் சமாதானத்தையே வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, எந்த இடத்திலும் மற்றவர் மீது கல்லெறிய கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிக்குமார் சிலருக்கு அறிவுரை வழங்கப்பட வேண்டும்; ஹர்ச டி சில்வா பிக்குமார் சிலருக்கு அறிவுரை வழங்கப்பட வேண்டும்; ஹர்ச டி சில்வா Reviewed by NEWS on June 20, 2019 Rating: 5