தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 15, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாரான மஹிந்த, வேட்பாளர் இல்லாமல் மைதிரி!...

இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாட்டுக்கு மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் போது மகிந்த ராஜபக்ச வேட்பாளரை அறிமுகப்படுத்த உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது, கிராம மட்டத்தில் கிளைகளை அமைத்து வாக்காளர்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டு வருவதுடன் ஆகஸ்ட் மாதம் அந்த பணிகளை நிறைவு செய்ய உள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவாக இருக்க மாட்டார் என, பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages