தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 15, 2019

அமைச்சு பொறுப்பை ஏற்பது தொடர்பில் ஆராய்ய வேண்டும் : கபீர் ஹாஸிம்

அரசாங்கமோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ மீண்டும் பதவியேற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தால் அது குறித்து ஆராய்ந்தே தீர்மானம் எடுப்பேன் என முன்னாள் அமைச்சரான ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாஸிம் எம்.பி தெரிவித்தார்.

பதவி துறந்த முஸ்லிம் எம்பிக்களில் சிலர் அல்லது அனைவரும் சில தினங்களில் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளப் போவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து கபீர் ஹாஷிம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் தெரிவித்தவாது,

இது தொடர்பில் கபீர் ஹாஷிம் தெரிவிக்கையில் , 

அரசாங்கமோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ மீண்டும் பதவியேற்றுக் கொள்ளுமாறு கோரினால் அது குறித்து ஆராய்வேன். ஆனால் அதற்காக உடன் பதவி ஏற்றுக் கொள்வது என்பது கருத்து அல்ல.

அஸ்கிரிய, மல்வத்தை மகாநாயக்கர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினர், மற்றும் பல தரப்பினரும் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் நிறையப் பேச வேண்டியுள்ளது. மேலும் எங்களது பிரச்சினைகளுக்கு இரண்டொரு தினங்களில் தீர்வு கிடைத்து நானோ, நாங்களோ அமைச்சராகி விடுவோம் என்றாகி விடாது. அது தவறான கருத்து. அதனை நான் முற்றாக நிராகரிக்கிறேன் என்றார்.மெட்ரோ நியூஸ்

Post Top Ad

Your Ad Spot

Pages