ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், நிச்சயம் வெற்றி பெற்று காட்டுவேன் :ராஜித

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் நிச்சயம் வெற்றி பெற்று காட்டுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஒரு அமைச்சராக இருந்து சுகாதாரம் மற்றும் கடற்தொழிலை மேம்படுத்தியதை போன்று ஜனாதிபதியானால் இந்த நாட்டை அபிவிருத்தியடைய செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...