தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 27, 2019

கோத்தாவுக்கு எதிராக அமெரிக்காவில் 10 முறைப்பாடுகள் பதிவு..!


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மேலும் 10 முறைப்பாடுகள் நேற்று அமெரிக்காவின் கர்லிபோனியா மாநிலத்தின் மத்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உடல், பாலியல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகங்கள் செய்யப்பட்டதாகக் கூறி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இரு தமிழர்கள், இரு சிங்களவர்கள் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர்களில் மூவர் பெண்கள் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் செயற்பட்ட முகாம்களில் தாம் பல துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்ததாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக கடந்த ஏப்ரல் 5ம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடையதாக இந்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை குறித்த முறைப்பாடுகளில் சிலவற்றில் இலங்கை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages