அமைச்சரவை தீர்மானத்திற்காக காத்திருக்கும் ஹிஸ்புல்லாஹ்..!மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பில் அமைச்சரவை வழங்கும் தீர்மானத்தின் பின்னரே, அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தனக்கு சவூதி அரேபியாவிலிருந்து 3000 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான பணம் கிடைத்துள்ளதாக, குறித்த கல்வி துறைசார் மேற்பார்வை தெரிவுக்குழுவின் ​தலைவர் ஆசூ மாரசிங்க தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் இது தொடர்பில் அவருடன் விவாதிக்க தயாராகவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாம் சட்டரீதியாகவே இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கி ஊடாக பணம் பெற்றோம் என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்

ஜ.மு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...