சாட்சியம் வழங்கிய ரிஷாத் - நடந்தது என்ன ? முழு விபரம் இதோ

கடந்த ஆண்டு அக்டோபர் அரசியல் புரட்சியில் ராஜபக்க்ஷ அணியில் இணைந்துகொள்ள எனக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது, அதனை நான் மறுத்தேன். அந்த கோபதாபங்களின் காரணமாகவே என்மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு என்னை ஸஹ்ரானுடன் தொடர்புபடுத்தி பேசுகின்றனர். நானோ எனது குடும்பத்தினரோ பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபடவில்லை. நான் ஸஹ்ரானை பார்த்தது கூட இல்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் கூறினார்,

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவுக்குழு முன்னிலையில் இவற்றைக் குறிப்பிட்டார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,

தெரிவுக்குழு :- இந்த குழு நியமிக்கப்பட்ட பின்னர் ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள்குழு சரியான காரணிகளை அறிக்கையிடவே உங்களிடமும் விசாரணை இடம்பெறுகின்றது. நீங்கள் சில காரணிகளை எம்மிடம் தெரிவித்துளீர்கள். ஆகவே அது குறித்த விசாரணையே இடம்பெறுகின்றது, 

கேள்வி:- உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை எடுத்து தெரிவுக்குழு அமைத்து விசாரணைகளை நடத்துங்கள் என நீங்கள் கூறியது ஏன்?

பதில் :- தெரிவுக்குழு அமைக்க வேண்டும் என நன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன். நான் மட்டும் அல்ல ஏனைய உறுப்பினர்கள் பலர் தெரிவுக்குழு வேண்டும் என்று கூறினார்கள். பயங்கரவாத செயற்பாடுகளுடன் என்னை தொடர்புபடுத்தி பாராதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் என்னைத் தொடர்புபடுத்தினர் . ஆகவே என்மீதான குற்றங்களை நான் நிராகரித்து அதனை நிருபிக்க வேண்டும். ஆகவே நானே தெரிவுக்குழு முன்னிலையில் வரவும் இணக்கம் தெரிவித்தேன். என்மீது குற்றம் சுமத்தி பொலிஸில் சிலர் முறைப்பாடுகளை செய்திருந்தனர். ஆனால் ஐ எஸ் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஸஹ்ரானை நான் வாழ்க்கையில் எப்போதும் பார்த்ததில்லை. இந்தத் தாக்குதல் இடம்பெற்று ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படத்தின் மூலமாகவே ஸஹ்ரானை முதலில் பார்த்தேன். இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நானும் உள்ளேன். இந்தச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் நானும் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து இது குறித்த வருத்தத்தை தெரிவித்தோம். இந்த பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட அனைவரையும் தண்டிக்க எம்மாலான சகல உதவிகளையும் வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தேன். அன்றிலிருந்து இப்போது வரையில் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்க வருகின்றேன.. அதுமட்டும் அல்ல எமது மதத் தலைவருடன் இணைந்து நாம் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டில் கருத்தொன்றை முன்வைத்தோம். இந்த பயங்கரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்ட எவரதும் உடல்களை எமது மயானனளில் அடக்கம் செய்ய அனுமத்திக்க மாட்டோம் என்றும் நாம் கூறினோம். இது எதிர்கால இளைஞர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கூறினோம். இந்த பயங்கரவாதிகள் இஸ்லாம் என்ற பெயரை வைத்துக்கொண்டு பயங்கரவாதத்தில் ஈடுபடலாம். ஆனால் இவர்கள் எவரும் முஸ்லிம்கள் அல்ல. தற்கொலை தாக்குதல் நடத்தவோ ஏனைய இனத்தவரை கொலை செய்யவோ இஸ்லாம் கூறவில்லை.

கேள்வி:- ஐ எஸ் அமைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? இந்த அமைப்பு செயற்படுவது முஸ்லிம் கொள்கையில் தனா?

பதில்:- முஸ்லிம் மதத்தில் அல்குர்ஆன் ஆகியவற்றில் ஏனைய மதத்தவரை கொல்வது பாவச் செயல் என தெளிவாக கூறியுள்ளது. ஒரு உயிரை கொல்வது ஒரு சமூகத்தை கொல்லும் செயல். ஒரு நபரை பாதுகாப்பது அந்தச் சமூகத்தை பாதுகாக்கும் செயல் என இஸ்லாம் கூறுகின்றது. இஸ்லாம் ஒருபோதும் இந்த செயற்பாடுகளை அங்கீகரிக்கவில்லை. அந்நிய இனத்தாரை கொல்ல வேண்டும் என இஸ்லாம் ஒருபோதும் கூரியில்லை.

கேள்வி:- உங்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கூறியுள்ள காரணிகளில் பிரதானமாக சதொச போன்ற நிறுவனங்களை பயன்படுத்து அதன் வாகனங்களை கொண்டு இந்த பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கூறப்படுகின்றது, இதன் உண்மைத்தன்மை என்ன?

பதில் :- சதொச எனக்கு பொறுப்புக் கொடுத்த பின்னர் அபிவிருத்தியடைய செய்துள்ளேன். இன்று நல்ல நிலைமையில் இது உள்ளது. என்னுடனான கோபத்தால் சிலர் பொய்யான காரணிகளை கூறுகின்றனர். கடந்த அரசியல் புரட்சி காலத்தில் எதிரணியின் பக்கம் என்னை அழைத்தனர். எனினும் நான் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆகவே அந்த அணியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை விமர்சித்து பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். என்மீது குற்றம் சுமத்திய நபர்கள் பொலிஸில் முறையிடுவார்கள் என நினைத்தேன், ஆனால் அவர்கள் அவ்வாறு முடையிடவில்லை. தேசியவாதிகள் என்றால் ஏன் எனக்கு எதிராக குற்றச்சாட்டு பொலிஸில் முன்வைக்கவில்லை.எனினும் இவர்கள் குறித்து நான் முறையிட்டேன். விமல் வீரவன்ச, எஸ்பி திசாநாயக இருவருமே இது குறித்து பேசினர். இவர்களின் கருத்து நான் பொலிஸில் முறையிட்டேன்.

கேள்வி:- அப்படியென்றால் இந்த ஜி.பி.எஸ் பொருத்தி எதனையும் செய்யவில்லையா?

பதில்:- நான் வந்த பின்னர் சதொச வாகனங்களுக்கு தான் ஜி.பி எஸ் பொருத்தப்பட்டது. இது தவறான செயற்பாடுகளை தடுக்கவே தவிர நன் தவறு செய்யவோ எனது தனிப்பட வேலையை செய்யவோ அல்ல.

கேள்வி:- அலாவுதீன் என்பவர் பயங்கரவாத செயற்பாட்டில் பிரதான நபர் எனவும் அவர் உங்களின் கட்சியின் பொருளாளர் என்றும் கூறுவது உண்மையா?

பதில்:- அலாவுதீன் என்பவர் வியாபாரி ஒருவர், அவர் எனது கட்சியின் பொருளாளர், அவர் சில நெருக்கடிகள் காரணமான கட்சியில் உப பொருளாளராக செயப்பட்டார். இந்தச் சம்பவத்தின் பின்னர் அவர் என்னை சந்தித்தார். அப்போது என்ன நடந்தது என கேட்டேன்.அப்போது அலாவுதீன் என்னிடம் கூறியது என்னவெனில் ” இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் மன்னார் சென்றாராம். அவர் கொழும்பில் வாழ்ந்தாலும் அவர் மன்னார் வாசி , அவருக்கு இரு ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளை திருமணம் செய்த நபர் இந்தத் தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர். அவர் சம்பியா என்ற நாட்டுக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்கு செல்வதாக கூறியுள்ளார். ஆகவே மகளும் தந்தையுமே அவரை விமான நிலையத்தில் விட்டு விட்டுக்கு சென்றுள்ளனர். அன்றிரவு துபாயில் தான் இருப்பதாக அவர் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவித்தாராம். அடுத்த நாள் காலையில் தான் கென்னியாவில் இருப்பதாக கூறினாராம். பின்னர் அவர் சம்பியா சென்று பேசுவதாக கூறினாராம். இரண்டு நாட்களின் பின்னர் குண்டுவெடிப்பின் பின்னர் தான் உண்மை தெரிய வந்ததாகவும் இவர் சம்பியா போகவில்லை. குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளதாக அவர் என்னிடம் கூறினார். இந்தச் சம்பவம் குறித்தோ இந்த நகர்வுகள் குறித்தோ ஒன்றுமே தெரியாது எனக்கு மட்டும் அல்ல எனது மகளுக்கும் தெரியவில்லை என்று கூறினார்.

கேள்வி:- இந்தத் தாக்குதல்களில் விசாரணைகளை நீங்கள் அழுத்தம் கொடுத்தீர்கள் என்பது தான் உங்கள் மீதான குற்றச்சாட்டாக உள்ளது. தெஹிவளையில் கைது செய்யப்பட்ட நபர் முஸ்லிம் விவகார அமைச்சில் உள்ள ஒருவரின் மகன் , அவ்வாறிருக்கையில் மொயமுதீன் என்ற நபர் கைது செய்யப்பட்ட நபரின் தந்தை முதலில் உங்களுடன் ஏன் தொடர்பு கொண்டார்? அவர் முதலில் முஸ்லிம் விவகார அமைச்சருக்கு தானே தொடர்புகொண்டிருக்க வேண்டும்?

பதில்:- அவர் பல அமைச்சுக்களில் கடமையாற்றினார். வடக்கிலிருந்து அகதிகளாக நாம் விரட்டியடிக்கப்பட்ட காலத்தில் இவர்தான் எமக்கு உதவினர், அன்றிலிருந்து அவரை எனக்கு நன்றாக தெரியும் . இந்தச் சம்பவம் நடந்த பின்னர் அவர் எஸ்எம்எஸ் மூலம் எனக்கு தகவல் ஒன்றறை அனுப்பினர், எனது மகனை யாரோ இனந்தெரியாத நபர்கள் அழைத்துக் கொண்டு சென்றதாக கூறினார். அன்றே அவர் பொலிஸில் முறையிட்டதாகவும் அவர் கூறினார், பொலஸார் இது குறித்து தெரியாது என கூறியுள்ளனர். பின்னர் அவர்களே அருகில் இருந்த எஸ்.ரி எப் முகாமில் விசாரிக்குமாறு கூறியுள்ளனர். அங்கும் இல்லை என்றவுடன் 27ஆம் திகதி எனது இல்லத்துக்கு வந்த அவர் அழுதுகொண்டே காரணிகளைக் கூறினார். தனது மகன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதை தான் அறிந்துகொள்ள வேண்டும் என கூறினார். காலையில் இருந்து மாலை வரையில் அவர் எனது வீட்டில்தான் இருந்தார். எப்படியாவது தேடித் தரும்படி அவர் கூறினார். எனவே, நாம் தெஹிவளை பொலிஸுக்கு பேசினேன். மேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு பேசினேன். ஆனால் அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்றனர். பின்னர் நான் இராணுவ தளபதிக்கு பேசினேன். அவர் கைது செய்யவில்லை என கூறியிருந்தால் நான் மீண்டும் அழைப்பு விடுத்திருக்க மாட்டேன். ஆனால், அவர் தேடிப்பார்த்து கூறுகின்றேன் என்றார். ஆகவே மீண்டும் அவருக்கு அழைப்பு விடுத்தேன் அப்போதும் தான் இன்னமும் பார்க்கவில்லை என்றார், தகவல் இருந்தால் அனுப்புங்கள் என்றும் கூறினார். பின்னர் தகவல் அனுப்பியும் எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் பேசினேன். அப்போது இராணுவத் தளபதி கூறினார் எங்களிடம் தான் இருக்கின்றார் என்று கூறினார். இதனால் தான் நான் மூன்று தடவை பேச வேண்டிய தேவை இருந்தது. அந்த தகவல் கிடைத்த பின்னர் மீண்டும் நான் இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கவில்லை.

கேள்வி:- அப்போதும் நீங்கள் அமைச்சரவை அமைச்சர் தானே? நீங்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு பேசினீர்களா?

பதில்:- ஜனாதிபதிதானே அமைச்சர், அவருக்கு நான் பேசவில்லை.

கேள்வி:- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு பேசினீர்களா?

பதில்:- அவருக்கு நான் தகவல்களை கூறினேன், ஆனால் பதில் கிடைக்கவில்லை.

கேள்வி:- பொலிஸ்மா அதிபருக்கு பேசவில்லையா?

பதில்:- இல்லை, தெஹிவளை பொறுப்பதிகாரியிடம் நான் பேசினேன்., அவர் இல்லையென கூறினார். ஆகவே நான் பேசவில்லை அவர்கள் இராணுவத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறினர்.

கேள்வி:- இராணுவத் தளபதி இங்கு சாட்சியம் வழங்குகையில் கூறினார், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் தொடர்புகொள்ள கூறியதாக கூறினார்.

ரிஷாத் :- நன்றாகத்தான் அப்போது நம் பேசினோம். குறித்த நபர் இருக்கின்றாரா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவை மட்டுமே இருந்தது. இராணுவத் தளபதி அவ்வாறு கூறினால் அது எனக்கு தேவையில்லாத விடயம்.

குழு:- சரி அது விடயம் அல்ல. நான் கேட்பது என்னவென்றால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் தான் நீங்கள் பேச வேண்டும் என்று அவர் கூறினார் என்றால் நீங்கள் இந்த பதிலுக்கான கேள்வி ஒன்றைக் கேட்டிருக்க வேண்டும் தானே?

ரிஷாத்:- நானா

குழு:- ஆம், நீங்கள் கேள்வி ஒன்றை கேட்டால் தான் இராணுவத் தளபதி அவ்வாறான பதில் ஒன்றைத் தருவார். அந்த நேரம் நகைச்சுவையாக பேசும் நேரம் இல்லைதானே.

பதில்:- பரபரப்பான நேரம் அது. ஒருவரை தேடிப் பார்க்க வேண்டும் என்று ஒருவர் கூறிய போது நான் அதற்கான நடவடிக்கை எடுத்தேன். ஏன் அவர் அவ்வாறு கூறினார் என அவரிடம்தான் கேட்க வேண்டும்.

குழு:- அவர் கூறிய பதில் எமக்கு தெரியும் . ஆனால் கேள்வி என்னவென்பது எனக்கு தெரியாது.

ரிஷாத்:- அவரும் கூறினார்தானே நான் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என. பலர் கைது செய்யப்பட்டனர். நான் ஒருவர் குறித்து மட்டுமே கேட்டேன்.

கேள்வி:- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தான் உங்களை இராணுவ தளபதியிடம் பேசக் கூறியதாக ஊடகங்களில் பார்த்தேன்?

பதில்:- ஆம், இந்த மாதிரியான பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்க அனைத்துத் தரப்பும் இணைந்து செயற்பட்டனர். அந்த நேரத்தில் எனக்கு தேவைப்பட்ட காரணியை மட்டும் நான் கேட்டேன்.

குழு :- இராணுவ தளபதியிடம் ஏன் அவ்வாறு கூறினீர்கள் என கேட்டேன்? நகைப்பிட்காக இதனை கூறினீர்களா என்று கேட்டேன். ஏனெனில் இந்த பதில் பொருந்தவில்லை.

கேள்வி:- இராணுவத் தளபதியை முன்னரே தெரியுமா?

பதில்:- இல்லை, அவர் இராணுவ தளபதி ஆனபின்னரே தெரியும்.

கேள்வி:- இதற்கு முன்னர் வேறு காரணிகளுக்காக இராணுவத் தளபதியை தொடர்பு கொண்டீர்களா ?

பதில்:- நீர்கொழும்பு சம்பவம் தொடர்பில் ஒருமுறை இராணுவத் தளபதியிடம் பேசினேன். வேறு எந்த தேவைக்காகவும் நான் பேசியதில்லை. ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் வேறு எதற்காகவும் பேசவில்லை.

கேள்வி:- முஹம்மத் இப்ராஹிம் என்பவரை தெரியுமா ?

பதில்:_ இப்ராகிம் என்பவர் கொழும்பு தொழில் சங்க தலைவர். அவரை சிறிது காலமாக தெரியும்.

கேள்வி:- எந்த வகையில் அவரை உங்களுக்கு தெரியும்?

பதில்:- அவரை அடிக்கடி சந்தித்ததில்லை. சில உத்தியோகபூர்வ சந்திப்புகளுக்கு வருவார். வர்த்தக சமூகத்தினருக்கு சில பிரச்சினைகள் வரும் நேரங்களில் அவருடன் பேசியுள்ளோம். அதனைத் தவிர வேறு எதனையும் இல்லை. இப்ராஹிம் அல்லது அவரது மகன்மாரோ எனது அமைச்சில் எந்த பொறுப்பிலும் இருக்கவில்லை . அவர் தொழிற் சங்கத் தலைவராக இருந்த காலங்களில் அவர் எம்முடன் பேசுவார். இது குறித்த புகைப்படங்கள் தான் வெளிவந்துள்ளது. ஆனால் அதற்கான தகவகல்களை ஊடகங்களில் உள்ளது. இது தனிப்பட்ட சந்திப்பு அல்ல.

கேள்வி:- அவரது பிள்ளைகளைத் தெரியுமா?

பதில்:- ஒரு மகனைத் தெரியம். அலாவுதீனின் மகள் திருமணம் செய்திருந்தவரை எனக்கு தெரியும்.

கேள்வி:- எந்த முறையில் தெரியும்?

பதில்:- அவர்களின் திருமண வீட்டுக்கு நான் சென்றிருந்தேன். அலாவுதீன் என்பவர் எமது கட்சியின் உறுப்பினர் அதனால் சென்றேன்.

கேள்வி:- அவரின் மகன்மார் உங்களின் அமைச்சில் ஏதேனும் உறுப்பினராக இருந்தனரா?

பதில் :- எனது செயலாளராக உள்ளவர்களின் தகவல்களை நான் தருகின்றேன். அமைச்சின் செயலாளர் ஏற்கனவே கூறியுள்ளார்.

கேள்வி:- இப்ராஹிம் சதொசவுக்குப் பொருட்கள் வழங்கினாரா ?

கேள்வி:- அது குறித்து எனக்கு தெரியாது. தேவையாயின் தவல்களை பெற்றுத் தர முடியும்.

கேள்வி:- விலைமனுக்கோரல் நிறுவனத்துக்கு நீங்கள் அழுத்தம் கொடுத்ததில்லயா?

பதில்:- நான் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இதில் தனிப்பட்ட எந்த தொடர்பும் எனக்கு இல்லை.

கேள்வி:- அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து முறையிட்டதாக நீங்கள் கூறுகின்றீர்கள், துருக்கியில் பயங்கரவாத பயிற்சி பெற்ற 57 பேர் இலங்கையில் உளதாக தெரிவித்தது உங்களுக்கு நினைவில் உள்ளதா?

பதில்:- இந்தத் தாக்குதலுக்கு பின்னர் நான் ஏற்கனவே கூறிய எம்.பி கூறிய கருத்துகளில் இந்த துருக்கி கதையையும் கேட்டேன். எனக்கு எந்த தகவலும் தெரியாது.

கேள்வி:- இந்த அடிப்படிவாத குழு குறித்து எப்போதிலிருந்து உங்களுக்கு தெரியும்?

பதில்:- இந்த சம்பவத்தின் பின்னர் தான் எனக்கு ஸஹ்ரான் மற்றும் இந்த குழுக்களின் செயற்பாடுகள் குறித்து தெரிந்தது.

கேள்வி:- கல்முனையில் நீங்கள் அரசியல் செய்தீர்களா ?

பதில் :- பலமான அரசியல் அங்கு செய்வதில்லை . ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளார். 

கேள்வி:- சில முஸ்லிம் தலைவர்கள் ஆரம்பத்திலிருந்து இந்த அமைப்பு குறித்து கூறியதாக தெரிவித்தனர். ஆனால் நீங்கள் இது குறித்து எந்த தகவலும் கொடுத்ததாக நாம் பார்க்கவில்லையே?

பதில்:- நான் உண்மையான முஸ்லிம் பக்தன். இஸ்லாத்தில் தவறுகள் செய்ய எங்கும் கூறவில்லை. உங்களின் மதம் உங்களுக்கு. எனது மதம் எனக்கு என்ற நிலையில் நான் உள்ளேன், மத ரீதியில் சில, சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. ஆனால், நான் எப்போதுமே இதுக்குள் செல்ல விருபவில்லை. ஸஹ்ரான் மௌலவி என்று கூறினாலும் அவர் மௌலவி இல்லை. அவர் மட்டுமே அதனை கூறிக்கொண்டிருந்தார். இதில் ஏனைய அனைவரும் நல்ல பணக்கார்கள். 

கேள்வி:- ஹிஸ்புல்லா உங்களின் கட்சியின் உறுப்பினராக இருந்த காலத்தில் தானே இது ஆரம்பிக்கப்பட்டது?

பதில்:- ஹிஸ்புல்ல எனது கட்சியிலிருந்து விலக, கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் மைதிரிபால் சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்தமை தான் காரணம். அவர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்க அங்கு சென்றுவிட்டார்.

கேள்வி:- அதுவரை எங்கு இருந்தார்?

பதில்:- அதுவரை சிறிது காலம் எமது கட்சியில் இருந்தார், சுமார் ஐந்து ஆண்டுகள் எமது கட்சியில் இருந்தார்

கேள்வி:- காத்தான்குடியில் தான் இவர்களின் குழு பலமாக உருவாக்கியுள்ளது. அப்படியென்றால் உங்களுக்கோ உங்களின் கட்சிக்கோ இது தெரியாது என்றால் எப்படி?

பதில்:- காத்தான்குடியில் நாம் அரசியல் செய்யும் பலம் எமக்கு இருக்கவில்லை நாம் புதிய கட்சி, இரண்டு பேர் தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தோம். இம்முறை ஐந்து பேர். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் எமக்கும் தொடர்பு இல்லை. 

கேள்வி:- இந்த காலத்தில் சகல முஸ்லிம் கட்சிகளும் அல்லது அதிகமான முஸ்லிம் கட்சிகள் ஸஹ்ரானுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர் உங்களுக்கும் இது தெரிந்திருக்கம்,

பதில்:- நானும் இதனை ஊடகங்களில் தெரிந்து கொண்டேன். ஆனால் எமது கட்சி அவருடன் எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை

கேள்வி :- நீங்கள் ஸஹ்ரானை சந்திக்கவில்லை என்றீர்கள், அது உண்மையா?

பதில்:- ஆம் நான் ஸஹ்ரானை சந்திக்கவில்லை,

கேள்வி:- எனினும் நாம் பார்த்தோம். ஊடகங்களில் நீங்களும் ஸஹ்ரானும் இருந்த படம் வெளியாகியது. அது குறித்து என்ன கூறுகின்றீர்கள் ?

பதில்:- ஆம் நானும் பார்த்தேன், தேரர் ஒருவர் தான் அதனை கூறினார், அந்த புகைப்படத்தில் இருப்பது ஸஹ்ரான் அல்ல. ஈமானியா அரபு கல்லூரி திஹாரியில் உள்ளது. அங்கு ஒரு நிகழ்வு இடம்பெற்றது. அங்கு நான் ஸஹ்ரானுடன் இருந்ததாக கூறுகின்றனர். குறித்த படத்தில் இருப்பவர் ஸஹ்ரான் அல்ல நிஸ்தார் என்பவர். பொய்யான புகைப்படங்களை பரப்பி என்மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

கேள்வி:- உங்களின் பெயரை கெடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. உங்களின் உறவினர் என்றும் கூறுகின்றனர் இது என்ன கதை?

பதில்:- எனது தாய்க்கு சகோதரர்கள் எவரும் இல்லை. இருந்த ஒருவரும் மரணித்து விட்டார். பொய்யான காரணிகளை கூறுகின்றனர். அலாவுதீனும் மகள் குண்டுத் தகுதளில் இறக்கவில்லை. அவர் உயிருடன் உள்ளார். ஆனால் ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரவுகின்றது.

கேள்வி:- நீங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லையா ?

பதில்:- நவடிக்கை எடுக்கவுள்ளேன். ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் என்னை பற்றி ஏதேனும் ஒரு பொய் கூருகின்றரர்.

கேள்வி:- இந்த பயங்கரவாதத்தை எந்த வகையில் தடுக்க முடியும் என நினைகிறீர்கள் ?

பதில்:- பயங்கரவாதம் என்ற விடயத்தில் அதிகம் அடி வாங்கிய நபர் நான்தான். யுத்த காலத்திலிருந்து எம்மை விரட்டியடித்தனர். இந்தியா செல்கின்றீர்களா கல்பிட்டிய சென்றீர்களா என்று கேட்டனர். நாம் இந்தியாவுக்குச் செல்லவில்லை கற்பிட்டிக்கு வந்தோம். நாம் படகில் பயணித்தே கற்பிடிக்கு வந்தோம். வழியில் கைக்குழந்தை ஒன்று கூட கடலில் வீழ்ந்த சம்பவம் கூட இடம்பெற்றது. இவ்வாறு நாம் மோசமான நிலைமைகளை அனுபவித்தோம். சரத் பொன்சேகா போன்றவர்களின் தலைமையில் எமக்கு அமைதி கிடைத்தது. நான் இலங்கையன் என்ற உணர்வுடன் அமைசுக்களைப் பெற்று நாட்டுக்காக அதிகமாக செயற்பட்ட நபர் நான். இன்று பயங்கரவாதத் தாக்குதலையடுத்து எமது நாடு பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. எனக்கு இந்த வலியை உணர முடியும். நான் சர்வதேச நாடுகளுக்கு சென்று எமது நாட்டைக் கட்டியெழுப்ப போராடிய நபரான என்னையே இன்று பயங்கரவாதிகள் என கூறுவது வேடிக்கையானது. கடந்த அரசியல் புரட்சியில் என்னை உதவுமாறு கேட்டவர்கள் எவருக்கும் நான் உதவாத காரணத்தினால் இன்று அவர்கள் என்னை தாக்குகின்றனர்.

கேள்வி :- ஐ. எஸ் அமைப்பு குறித்து ஏன் முஸ்லிம் தலைமைகள் ஒன்றும் பேசவில்லை ?

பதில் :- இந்த தாக்குதல் இடம்பெற பின்னர் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் இந்த அமைப்பை எதிர்த்து கருத்துக்களை முன்வைத்தோம். கர்தினால் ரஞ்சித ஆண்டகையைச் சந்தித்து பேசினோம். அன்றிலிருந்து நாம் பாதுகாப்பு தரப்புக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றோம் பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தில் இல்லை, மதத்தில் அவ்வாறு கூறியும் இல்லை.அவ்வாறான நபர்கள் இருந்தால் நாட்டின் சட்டத்கின் கீழ் தண்டிக்க வேண்டும்.

கேள்வி :- வில்பத்து விடயத்தில் ஏக்கர் கணக்கில் உங்களுக்கு நிலம் உள்ளதா?

பதில் :- வில்ப்பத்து விவாகரத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் அங்கு ஒரு அடி நிலம் கூட நான் முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை. யுத்தத்தின் பின்னர் 2013, 2014 ஆம் ஆண்டில் முஸ்லிம் மக்களை குடியேற்றினோம், அப்போது சகல அதிகாரிகளும் இதில் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்தோம். பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்தனர். இவர்களின் ஆலோசனைகளுக்கு அமையவே குடியேற்றம் இடம்பெற்றது. முன்னைய ஆட்சியில் இது இடம்பெற்றது., வனப்பகுதியில் ஒரு ககுடும்பத்தையேனும் குடியமர்த்தவில்லை. வடக்கில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் யுத்தத்தின் பின்னரே குடியேற்றப்பட்டனர், ஆனால் ஊடகங்களில் இது குறித்து பொய்யான கருத்துக்கள் பரவுகின்றது. இதுகுறித்து ஜனாதிபதி அமைத்த ஆணைக்குழு அறிக்கை ஒன்றும் உள்ளது. இது பாராளுமன்றத்தில் உள்ளது. இதில் என்மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. அப்படி இருந்தும் தவறான கருத்துக்களே இன்றும் பரப்பப்பட்டு வருகின்றது.

கேள்வி :- வில்பத்வில் 3000 ஏக்கர் உங்களுக்கு இருப்பதாக கூறுவது உண்மையா ?

பதில் :- இது பொய். இதில் முதலில் 3000 ஏக்கர் காணிகள் இருப்பதாக கூறினார் பின்னர் 7000 ஏக்கர் என்றால் இப்போது 8000 ஏக்கர் உள்ளன என்கிறனர். இது பொய். அவ்வாறு இருந்தால் அந்த நிலத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடியும். என்னிடம் தீவு ஒன்றும் உள்ளதாக கூறுகின்றனர். அப்படி இருந்தால் அதனையும் அரசாங்கமே கையகபடுத்திக் கொள்ளலாம். எனது குடும்பத்தினருக்கும் 57 ஏக்கர் சொத்துகள் தான் உள்ளது. அதனை விட்டு ஏனைய நிலங்கள் இருந்தால் அரசாங்கம் கையகப்படுத்தலாம் .
சாட்சியம் வழங்கிய ரிஷாத் - நடந்தது என்ன ? முழு விபரம் இதோ சாட்சியம் வழங்கிய ரிஷாத் - நடந்தது என்ன ? முழு விபரம் இதோ Reviewed by NEWS on June 29, 2019 Rating: 5