தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 9, 2019

மன்னாரில் 1 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மின் இணைப்புக்கள் வழங்கி வைப்புகைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களது நிதி ஒதுக்கீட்டிலிருந்து மன்னார் பிரதேச சபைக்குற்பட்ட 52 குடும்பங்களுக்கான இலவச மின்னிணைப்பு காசோலை வழங்கும் நிகழ்வு மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது 

இந்நிகழ்விற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பிரத்தியேக செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் 

இதன்போது உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள் 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியென்பது ஒரு சமூகம் சார்ந்து செயற்படுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல மாறாக தேவைகள் இருக்கின்ற அனைத்து இந மக்களுக்கும் சேவைகளை செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட கட்சி என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது உங்களுக்கு தெரியும் இந்த நாட்டில் சமூகத்திற்காக குரல் கொடுத்து தன்மீது பல வீண்பழிகளை சுமத்தியும் பேரினவாதிகளின் சதிகளுக்கு எதிர்நீச்சல் அடித்து போராடிக்கொண்டிருக்கும் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மட்டும்தான் அவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் இருந்தாலும் சமூகம் சார்ந்த விடையங்களை அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இனம் மதம் பாராமல் செய்து கொண்டிருக்கின்றார் கட்சிப்பாகுபாடுகள் இன்றி செயற்படும் ஒருவராக இந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் முதன்மையானவராகவும் இருக்கின்றார் அதேபோல ரிஷாட் பதியுதீன் அவர்களது அரசியல் பாசறையில் வளர்ந்த நாங்களும் பதவிகள் இனம் மதம் போன்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டு எந்நேரமும் சேவைகள் செய்துவாருகின்றோம் இனியும் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம் "என தெரிவித்தார் 

மேலும் இந்நிகழவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாகாண பணிப்பாளர் முனவ்வர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ராசிக் மற்றும் காட்டாஸ்பத்திரி இணைப்பாளர் ரஹீம் மற்றும் பயனாளிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages