ஹக்கீம், ரிஷாத் உள்ளிட்ட 4வர் அமைச்சராக பதவியேற்றனர்

அமைச்சுப் பதவிகளைத் துறந்த அமைச்சர்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரைத் தவிர ஏனையோர் மீண்டும் அமைச்சர்களாக மற்றும் இராஜாங்க பிரயமைச்சர்களாகப் பதவிப் பிரமாணஞ் செய்து கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் .இன்று (29) சத்தியப் பிரமாணஞ் செய்து கொண்டனர்.

இதன்படி நகர திட்டமிடல். நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராக ரவூப் ஹக்கீமும் கைத்தொழில், வர்த்­தகம், கூட்­டு­றவு அபி­வி­ருத்தி மற்றும் நீண்ட கால­மாக இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றல் அமைச்சராக ரிஷாத் பதி­யுதீனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அமீர் அலியும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சராக அப்துல்லாஹ் மஹ்ரூபும் பதவியேற்றனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எச்.எம்.எம். ஹரீஸ், அலி ஸாஹிர் மௌலானா, பைசல் காசிம் ஆகியோர் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கவில்லை.
ஹக்கீம், ரிஷாத் உள்ளிட்ட 4வர் அமைச்சராக பதவியேற்றனர் ஹக்கீம், ரிஷாத் உள்ளிட்ட 4வர் அமைச்சராக பதவியேற்றனர் Reviewed by NEWS on July 29, 2019 Rating: 5