சிங்கள- முஸ்லிம் கலவரத்தை தூண்ட முயற்சி - அஸ்கிரிய மகாநாயக்க தேரர்

தான் கூறிய கருத்துகளைத் திரிவுபடுத்தி வேறு அர்த்தங்களை வெளிப்படுத்தி தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் சில முயற்சிப்பதாக அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் அவர் கூறியுள்ளார்.

மேலும் குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டில் சிங்கள- முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...