ஷாபியை முஸ்லிம் என்று பார்க்காமல் நீதியை வழங்குங்கள் - பாராளுமன்றில் ராஜித

வைத்தியர் ஷாபியை முஸ்லிம் என்று பார்க்காமல் நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

அத்துடன் வைத்தியர்களின் சேவையை அரசியல் கோணத்தில் பார்க்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று மக்களின் சுகாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல விடயங்களை சுகாதார அமைச்சு மேற்கொள்வதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளிப்படுத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்குமாறு தெரிவித்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...