டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் : மஹிந்த தேசப்பிரிய

டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் சென்று தேர்தலை பிற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார். 

மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பதிலாள் வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கப்போவதில்லை. 

அதனால் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக பதில் வேட்பாளர்களை நியமிக்க முயற்சிக்கவேண்டாம். பிரதான வேட்பாளருக்கு ஒத்ததாக ஆடை அணிந்தும் உருவத்தை மாற்றிக்கொண்டு செயற்படுவதும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். இதற்கு நாங்கள் இணங்கமாட்டோம். அதேபோன்று ஜனாதிபதி வேட்பாளராக சுயாதீனமாக போட்டியிட களமிறங்கும் யாராவது பதிலாள் வேட்பாளர் போன்று செயற்பட்டால் அவர் பதிலாள் என்று பகிரங்கப்படுத்த ஆணைக்குழுவுக்கு நேரிடும். அவர்கள் எங்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலும் பரவாயில்லை என்றும் குறிப்பிட்டார். 
டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் : மஹிந்த தேசப்பிரிய டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் : மஹிந்த தேசப்பிரிய Reviewed by NEWS on July 23, 2019 Rating: 5