”அவசரம் காட்ட வேண்டாம்” : முஜீபுர் ரஹ்மானிடம் உலமா சபை கோரிக்கை

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத் திருத்தம் குறித்த முன்மொழிவுகளை அமைச்சரவையின் அனுமதிக்காகச் சமர்ப்பிப்பதற்கு அவசரம் காட்ட வேண்டாம் என, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹுமானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்மானம் மேற்கொள்வதற்கு ஏதுவான வகையில், இரு தரப்புச் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ஜம் இய்யத்துல் உலமா அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹுமானுக்கு, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ் ஷேய்க் எம்.எம்.ஏ. முபாறக் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...