தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 1, 2019

ஹிருணிகாவுக்கு தடை விதித்த ஜனாதிபதி - இருவருக்கும் இடையில் பிரச்சினைதொலைக்காட்சியொன்றில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் தாம் பங்கேற்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுத்து நிறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்க தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்கே ஜனாதிபதி தடை ஏற்படுத்தியிருந்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி ஆங்கில ஊடமொன்று இன்றைய தினம் -01- செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், பின்னர் இறுதி நேரத்தில் தம்மை அந்த நிகழ்ச்சியிலிருந்து நீக்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதியின் நேரடித் தலையீட்டின் கீழ், தம்மை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க செய்யும் சதி திட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும், தொலைக்காட்சி சேவைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார் எனவும் ஹிருணிகா தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages