தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 10, 2019

கதிர்காமம் முஸ்லிம் பள்ளிவாயலில் சேவல் கொடியா??

கதிர்காமத்தில் வருடம் தோறும் பள்ளிவாசலில் ஏற்றப்பட்டு வந்த சேவல் கொடி இந்த வருடம் ஏற்றப்படவில்லை
என இந்து மக்கள் மத்தியில் பேசப்பட்டு சமூக வலைத்தளங்களில் இனமுறுகல் ஏற்படும் வகையில் செய்திகள் பரப்பிக்கொண்டிருப்பதாகவும், சிலர் பள்ளிவாசல் அருகில் சென்று இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயப்படுவதாகவும், தகவல்கள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக இந்து மக்கள் அச்சமடைய தேவையில்லை. வீண் வாக்குவாதங்களையோ, மனத்தாங்களையோ ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என நாம் முருகப் பெருமானின் பகதர்களிடமும் இந்து மக்களிடமும் மிகவும் வினையமாக கேட்டுக்கொள்கிறோம் என அகில இலங்கை இந்து குரு சபை தலைவரும்; மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளருமான சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.

கதிரகாமத்தில் தற்போது தோன்றியுள்ள பதிய சர்ச்சையினை அடுத்து இன்று மாலை (09) ஹட்டனில் ஒழுங்கு செய்திருந்து ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பிறிதொரு மத்தின் கொடியையோ அல்லது சினனத்தையோ ஏற்றுவது அது அவர்வர் விருப்பம் அவர்களின் மதத் தலத்தில் அவர்களின் கொடிகளை ஏற்றுவதில் எவ்வித தவறுமில்லை.

இந்த நிலையில் இவ்வாறு கொடியை வைத்துக்கொண்டு இந்த நாட்டில் மீண்டும் ஒரு இனவாத்தைனையோ மதவாதத்தையோ தூண்டுவதற்கு இடமளிக்கக் கூடாது.

இந்து மதம் என்பது ஒரு பரந்து விரிந்த மதம் அனைவராலும் போற்றக்கூடிய புனிதமான மதமாகும். அவர்கள் இந்து மதத்தின் கொடியை இவ்வளவு காலமும் ஏற்றி வந்தது அவர்கள் அதன் புனிதத் தன்மையை உணர்ந்ததனால் தான். இவ்வருடம் ஏற்றவில்லை. என்று முரண்படுவதில் எவ்விதமான அரத்தமும் கிடையாது. அவரவர் மதத்தில் அவர்களுடைய தேவைப்பாடுகளை உணர்ந்து சுதந்திரமாக செயப்படுவதற்கு அவரவருக்கு உரிமையுண்டு.

இந்து ஆலயத்தில் இந்துக் கொடி ஒன்றை ஏற்றவில்லை என்றால், அதனை கேட்பதற்கு எமக்கு உரிமையுண்டு. ஆனால் பிறிதொரு மதத்தத்தினர் கொடியேற்றவில்லை என்பதை சர்ச்சையாகக் கொள்ள வேண்டிய தேவைபாடு எதுவும் கிடையாது.என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் கடந்த காலங்களில் சமயங்களிடையே நல்லிணக்கம் சகவாழ்வு ஏற்படும் வகையில் கொடிகள் ஏற்றப்பட்டு மத வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய வகையில் காணப்பட்டமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றே என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்புக்கு இந்த அமைப்பின் உப தலைவரும் கலஹா ஸ்ரீ குமரன் ஆலய பிரதம குருவுமான பிரகர குருக்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கதிர்காம கொடியேற்றம் கடந்த மாதம் ஜூன் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஜுலை மாதம் 13 ஆம் திகதி நீர்வெட்டுடன் நிறைவு பெறுவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(ஹட்டன் கே.சுந்தரலிங்கம்) Metro

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages