பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று! தயாசிறி செல்வாரா?

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று பிற்பகல் 2.00 மணியாளவில் கூடவுள்ளது.

இன்றைய தினம் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் அளிப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சாட்சியம் அளிப்பதற்காக இதற்கு முன்னர் அழைக்கப்பட்டிருந்த போதும் அங்கு ஆஜராகியிருக்கவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...