தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 2, 2019

இன்றைய அமைச்சரவையில் களேபரம் - மட்டக்களப்பு கெம்பஸுக்கு நடக்கப்போவது?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மைத்திரிபால சிறிசேனவினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள மரணதண்டனை விடயம் குறித்து இன்றைய அமைச்சரவையில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரி, என்ன தடைகள் வந்தாலும் அதனை நிறைவேற்றியே தீருவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதன்போது அமைச்சர் மங்கள சமரவீர மரணதண்டனை அமுலாக்கம் தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பில் சவுதி அரேபியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தை உடனடியாக உயர்கல்வி அமைச்சுக்கு கீழே கொண்டுவருமாறு ஜனாதிபதி பிரதமருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆனால் அது தனியார் முதலீடு என்பதால் அதனை உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதில் சிக்கல் நிலைமை உள்ளதாக பிரதமர் ரணில் இங்கு சுட்டிக்காட்டினார்.ஆனால் பிரதமரின் இந்தக் கருத்தால் கொதிப்படைந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசின் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாததென தெரிவித்தார்.

அரசு இந்த விடயங்கள் தொடர்பில் செயற்படும் விதம் குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்ட சம்பிக்க உடனடியாக மட்டக்களப்பு கெம்பஸ் விடயத்திற்கு ஒரு முடிவு காணப்பட வேண்டுமென பிரதமரை வலியுறுத்தினார்.

இந்த அமைச்சரவை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சீனாவில் இருந்து சிகரெட்டுகள் இறக்குமதி செய்யப்படுவது குறித்தும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் மங்கள, சட்டவிரோதமாக சீன சிகரெட்டுகள் இலங்கை கொண்டுவரப்படுவதால் இப்படி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்க பதிலளிக்கும் வகையில், அப்படியானால் அதற்கு தீர்வு சிகரெட் இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவதல்ல சட்டவிரோத சிகரெட்டுகளை கைப்பற்றுவதே என்று அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்திருந்தார் எனவும் தகவல் ளெியாகியுள்ளது.

 ibc NEWS 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages