தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 9, 2019

ஏறாவூர் வீட்டிலிருந்து கைக்குண்டும்,துப்பாக்கி தோட்டாக்களும் மீட்பு !!


கிழக்கு மாகாணத்தின் ஏறாவூரில் முகாந்திரம் வீதியில் உள்ள வீடொன்றின் கூரையின் நீர்தாங்கியொன்றினுள் இருந்து கைக்குண்டு மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் பொலிஸார்,விசேட அதிரடிப்படை மற்றும் இரானுவத்தினர் இன்று (09) காலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதன்போதே, கூரையின் நீர்த்தாங்கியில் இருந்து 2 கைக்குண்டு, மற்றும் 63 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட கைக்குண்டை ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் விசேடஅதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அபு ஹின்ஸா 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages