பாடசாலையில் சுகயீனமடைந்த மகனை பார்க்க ஓடிய தகப்பன் : இராணுவம் சுட்டுக்கொன்றதுமாத்தறையில் பாடசாலை ஒன்றில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அக்மீமன ஆரம்ப பாடசாலையின் பாதுகாப்பில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர் கராப்பிட்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த நபருக்கு தனது மகன் சுகயீனமாக இருப்பதாக பாடசாலையில் இருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய பாடசாலைக்கு வந்த நபரை உள்ளே செல்ல இராணுவ சிப்பாய் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். எனினும் அவர் உத்தரவை மீறி பாடசாலைக்கு நுழைய முயற்சித்தமையினால் இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கு தொடர்புடைய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்மீமன பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த சம்பவத்தினால் அந்தப் பகுதி மக்கள் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், சுகவீனமுற்ற பிள்ளையை பார்க்க வைத்த தந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை குறித்து பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...