தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 12, 2019

தோப்பூர் உள்ளிட்ட பல்வேறு பிரதேச செயலகங்கள் தொடர்பில் ஆராய்வு

திருகோணமலை மாவட்டம் தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் கோரி பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன இது விடயம் தொடர்பில் பல்வேறு சந்திப்புக்களும் குறித்த ஆவணங்கள் தொடர்பான அமைச்சரவை பத்திரம் மூலமான பல விடயங்கள் பேசப்பட்டதற்கு இணங்க இன்று (12) உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களை கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றது

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் தோப்பூர் பிரதேச செயலக தனி உருவாக்கம் பற்றிய ஆவணங்கள் அடங்கிய கோவைகளை அமைச்சரிடத்தில் கையளித்து தனிப் பிரதேச செயலக உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.


மக்களின் கோரிக்கை நியாயமானது மூவின சமூகமும் இதன் மூலமாக தோப்பூருக்கான தனி பிரதேச செயலக உருவாக்கம் தொடர்பில் பல கலந்துரையாடல்கள் கோரிக்கைகள் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது இது விடயம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு தனி பிரதேச செயலகம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கல்முனை, கோரளைப் பற்று பிரதேச செயலகம் உருவாக்கம் தொடர்பிலும் முன்னால் இராஜாங்க அமைச்சர்களான ஹரீஸ்,அமீர் அலி போன்றோர்களும் கலந்துரையாடலில் இதன் போது ஈடுபட்டார்கள்.

இக் கலந்துரையாடலில் முன்னால் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எம்.அமீர் அலி, ஹரீஸ், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உட்பட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் உடனிருந்தார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages