சஜித்தை கொலை செய்ய அரசியல் “கைக்குண்டு” தாக்குதல்!தம்மை கொலை செய்து விடுவார்களோ என்ற அச்சம் தனக்குள் இப்பொழுது எழுந்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.காலி அல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையில் மேலும்,

சில நபர்கள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.எதிர்நீச்சல் போடும் போது சில நரிகள் நதி ஓரத்தில் இருந்து கொண்டு கூக்குரல் இடுகின்றன.எமது கிராம எழுச்சித் திட்டமும் அவ்வாறான ஓர் எதிர்நீச்சல் போடும் திட்டமாகும்.

நதியின் கரையில் இருக்கும் இரண்டு பக்கங்களையும் சேர்ந்த நரிகள் தொடர்ச்சியாக என்னை இழிவுபடுத்தி வருகின்றன.

எத்தனை அச்சுறுத்தல்கள் எத்தனை விமர்சனங்கள், சில வேளைகளில் இவர்கள் என்னை படுகொலை செய்து விடுவார்களா என்ற அச்சமும் எழுகின்றது.

“இரண்டு பக்கங்களிலும் உள்ள நரிகள் கைகளில் அரசியல் கைக்குண்டு ஒன்றை வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள், இந்த சஜித் பிரேமதாச மீது தாக்குதல் நடாத்தும் நோக்கில்” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஜித்தை கொலை செய்ய அரசியல் “கைக்குண்டு” தாக்குதல்! சஜித்தை கொலை செய்ய அரசியல் “கைக்குண்டு” தாக்குதல்! Reviewed by NEWS on July 18, 2019 Rating: 5