இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் ஆலோசனை வழங்கினோம் : முன்னாள் பொலிஸ்மா அதிபர்

அரசாங்க புலனாய்வு பிரிவு தனது கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தாலும் அதன் பணிப்பாளருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் தான் ஆலோசனை வழங்கியதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

2015 ஆம் ஆண்டில் அரையாண்டில் ஐஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கொள்ள 5 குடும்பங்களை சேர்ந்த 34 பேர் சிரியா சென்றதாக தகவல்கள் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

இந்த தகவல்கள் தொடர்பில் அடிக்கடி பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது கலந்துரையாடியதாகவும் அதன்போது எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகளை முன்னெடுத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் அரசாங்க புலனாய்வு பிரிவு தனது கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தாலும் அதன் பணிப்பாளருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் தான் ஆலோசனை வழங்கியதாகவும் அது தேசிய தேவை என தான் கருத்திற்கு கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...