அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய பிரதி மேயராக யாசீர் நியமனம்..!

அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய பிரதி மேயராக காதிரிய்யா வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த எம்.சீ.எம்.யாசீர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயராக பதவி வகித்துவந்த அஸ்மி அப்துல் கபூர், கட்சியின் ஏனைய மாநகர சபை உறுப்பினர்களுக்கும் பிரதி மேயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் குறித்த தனது பதவியினை இராஜினாமாச் செய்திருந்தார். 

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர், முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சிபாரிசில் எம்.சீ.எம்.யாசீர் தெரிவத்தாட்சி அதிகாரி திலின விக்ரமரத்னவினால் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜுலை 4ஆம் திகதி வெளியிடப்பட்டது. இவர் தனது கடமைகளை இவ்வாரம் மாநகர பிரதிமேயர் காரியாலயத்தில் உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய பிரதி மேயராக யாசீர் நியமனம்..! அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய பிரதி மேயராக யாசீர் நியமனம்..! Reviewed by NEWS on July 09, 2019 Rating: 5