”ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் ”

போதைப்பொருளை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மேற்கொண்ட செயற்பாடுகளினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரி, இந்த உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக தனக்கு புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து தகவல் கிடைத்ததாக கூறியுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களை தூக்கிலிடப்போவதாக அண்மையில் ஜனாதிபதி அறிவித்ததுடன் 4 பேரின் தூக்குத்தண்டனையில் தான் கையொப்பமிட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையிலேயே குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...