தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 13, 2019

ஷாபி விவகாரம் : கோத்தாவுக்கு இரகசிய தொடர்பு

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் ஷாபி மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுக்கள், மொட்டுக் கட்சியின் அரசியல் சூழ்ச்சி என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதனடிப்படையில், ஷாபி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்த போது, விசேட அனுமதியைப் பெற்றுக்கொண்டு அவரைச் சந்திக்க இரண்டு சட்டத்தரணிகள் சென்றுள்ளனர். இவர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (மஹிந்த ராஜபக்ஷவின் மொட்டுக் கட்சி) சட்டத்தரணிகள் எனக் கூறப்படுகிறது. கோதாபய ராஜபக்ஷவின் இரகசியத் தகவல் ஒன்றைச் சொல்வதற்காகவே இவர்கள் அங்கு சென்றுள்ளதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.

"இது திவயின பத்திரிகையும், ரத்தன தேரரும் நடத்தும் நாடகம் என்று எமது தலைவருக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும்/ உங்களுக்கு எதிரான எவ்வித குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க முடியாது. நிரூக்க அப்படி எதுவும் இல்லை. இது பொய்யான விவகாரம்.

எமது தரப்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமா? காரணம் குருணாகல் முஸ்லிம் மக்களின் அனைத்து வாக்குகளையும் உங்களுக்குப் பெற முடியும். தகுதியானவருக்கு தகுதியானதை வழங்க நாம் தயார். நீங்கள் எமது பக்கம் வர விருப்பமென்றால், நாம் அனைத்தையும் சமாளிப்போம். வெளியே பிரச்சினைகள் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இவை அனைத்திற்கும் நாம் தீர்வு தருகிறோம். உங்களின் விருப்பம் மட்டுமே எமக்குத் தேவை.'' என்று கோதாபய ராஜபக்ஷ அனுப்பிய தகவலை ஷாபிக்கு அந்த சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவரம்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages