முஸ்லிம் எம்.பிக்கள் அமைச்சு பதவிகளை ஏற்க தயார் : முஜிபுர் ரஹ்மான்

இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்பது என ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளதாகவும், இந்த நியமனத்தை பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை ஜனாதிபதி அறிவிப்பதே எஞ்சியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று மாலை அலரி மாளிகையில் நடாத்திய விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

பெரும்பாலும் நாளை அல்லது நாளை மறுதினம் இந்த பதவி ஏற்பு நிகழ்வு நடைபெறலாம் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனும் அன்றைய தினம் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...