தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 6, 2019

முஸ்லிம்களை பிழையாக எழுதும், இனவாத ”திவயின” பத்திரைகைக்குள் குழப்பம்.!திவயின பத்திரிகைக்கு உள்ளேயே அதன் செய்தியாளர் ஹேமந்த ரந்துனுவிற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சட்டவிரோத கருத்தடை சிகிச்சை குறித்த செய்திகளினால் தமக்கு பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகையின் செய்தியாளர்கள் சிலர் ஹேமந்தவிற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தௌஹீத் ஜமாத் அமைப்பின் வைத்தியர் ஒருவர் சிங்கள பௌத்த தாய்மாருக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக ஹேமந்த ரந்துனு செய்தி வெளியிட்டிருந்தார்.

இ;ந்த செய்தியானது குருணாகல் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்துடன் இணைந்து செய்யப்பட்ட போலிப் பிரச்சாரம் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

போலிச் செய்தி வெளியீட்டின் காரணமாக ஒட்டுமொத்த திவயின பத்திரிகையின் நம்பகத்தன்மை வீழ்ச்சியடைந்துள்ளதாக செய்தியாளர்கள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.

பொய் சொல்லுவதிலும் ஓர் வரையறை இருக்க வேண்டும் எனவும் ஒன்று இரண்டு பிழைத்து விட்டால் வாயை மூடிக் கொண்டு இருப்போம் என்றி;ல்லாம் தொடர்ந்தும் அவமானப்படும் வiயில் ஹேமந்த ரந்துனு போன்றவர்கள் செயற்பட்டு வருவதாக சக பணியாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
LNWEB

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages