தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 5, 2019

பந்துல இளவயது பெண்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் -தம்பர அமில தேரர்முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பந்துல குணவர்தன பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தம்பர அமில தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தன்னுடன் விவாதம் செய்ய வருமாறு அண்மையில் பந்துல குணவர்தன, தம்மர அமில தேரருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பிற்கு பதிலளித்து ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட போது இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பந்துல குணவர்தன ஹங்வெல்ல பகுதியில் இள வயதில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதாகவும், பௌத்த விஹாரை ஒன்றில் விஹாராதிபதியுடன் கோபித்துக் கொண்டு கோயில் ஒன்றில் சிறுநீர் கழித்ததாகவும், தரம் 7 முதல் 10 வரையில் எங்கு படித்தார் என்பதனை நிரூபிக்க வேண்டுமெனவும் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

தகுதி தராதரம் உடையவர்களுடன் மட்டுமே தாம் விவாதம் செய்வதாகவும் அந்த தகுதி தராதரம் பந்துலவிற்கு உண்டா என்பது சந்தேகமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லங்காநியூஸ்வெப்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages