ரத்ன தேரர் சட்டத்தைக் கையில் எடுக்கப் போவதாக எச்சரிக்கைகர்ப்பப்பையை பரிசோதிக்க போதிய உபகரணங்கள் அரசிடம் இல்லாது போனால் பொது மக்கள் பணத்திலிருந்து அதனைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.

வைத்தியர் சாபி தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை உரிய தரப்புக்கு கண்டறிய முடியாவிடின், தானும் குருணாகல் மக்களும் இணைந்து அவற்றை வெளிப்படுத்த தயாராகவுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர் சாபியினால் பாதிக்கப்பட்டவர்களை மேற்கொண்ட பரிசோதனை தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திருப்பதிப்படவில்லை. இருப்பினும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இதில் தமது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மருத்துவம் தொடர்பான விடயத்தில் அரச மருத்துவ அதிகாரிகளை விடவும், சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு என்ன ஞானம் இருக்கின்றது எனவும் தேரர் கேள்வி எழுப்பினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...