கோத்தாபாயவை சிறையில் அடைக்கவும் - உதய கம்மம்பில

ஜனாதிபதி வேட்பாளராக பிவிதுரு ஹெல உறுமய சார்பில் கோட்டாபய ராஜபக்ஸவையே முன்மொழிவதாகவும், அவரை சிறையில் போட்டால், சிறையில் இருக்கும் நிலையில் தேர்தலை வெற்றி கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.

அம்புல்தெனிய ஹோட்டலில் இன்று (7) நடைபெற்ற அக்கட்சியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வேட்பாளர் சிறையிலுள்ள போது தேர்தலை வெற்றி பெறுவது மிகவும் இலகுவான ஒரு கருமம் எனவும், அது போன்ற ஒரு நிலைமையை உருவாக்கித் தரும் பணியை ஐக்கிய தேசியக் கட்சி செய்யுமாக இருந்தால், மாபெரும் உதவியாகும் எனவும் கம்மம்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டணியொன்று அமைக்கும் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு கௌரவமான இடமொன்று தேவை என்றிருந்தால், அந்த உதவியை வழங்க தயாராக இருப்பதாகவும் கம்மம்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக கோட்டாபயவும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவும் வரவேண்டும் என்பது கடந்த 4 வருடங்களாக கூறிவரும் கருத்தாகும் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...