பயங்கரவாதம் முற்றுப் பெறும் காலத்தை சரியாக கூற முடியாது

பயங்கரவாத செயற்பாட்டுக்கு கால நேரம் இல்லை என்றும், நாட்டின் பாதுகாப்பு படை எந்த நேரமும் தயார் நிலையில் இருப்பதாகவும் இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க கூறியுள்ளார். 

றாகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

நாட்டின் பாதுகாப்பு நிலமை தற்போது அமைதியான நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், கைது நடவடிக்கை மேலும் தொடர்ந்து கொண்டிருப்பதகாவும் அவர் கூறியுள்ளார். 

தற்போது உலக பயங்கரவாதத்துக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும், பயங்கரவாதம் முற்றுப் பெறும் காலத்தை சரியாக கூற முடியாது என்றும் அனைவருக்கும் அமைதியை பெற்றுக் கொடுக்க செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும், இராணுவத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...