ஷாபி ஆஜரானார் - நடக்கப்போவது என்ன ?

குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்றினை சி.ஐ.டி இன்று குருணாகல் நீதிவான் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வைத்தியர் ஷாபி விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று குருணாகல் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வரும் நிலையிலேயே இந்த விஷேட விசாரணை அறிக்கையை முன்வைக்க சி.ஐ.டி. தீர்மனைத்துள்ளதாக நான்காம் மாடித் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் சி.ஐ.டியினர் முன்வைக்கவுள்ள விஷேட அறிக்கையில் பிரதானமாக மூன்று விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதையத்து வைத்தியர் ஷாபி சற்றுமுன்னர் குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷாபி ஆஜரானார் - நடக்கப்போவது என்ன ? ஷாபி ஆஜரானார் - நடக்கப்போவது என்ன ? Reviewed by NEWS on July 11, 2019 Rating: 5