ரிஷாட் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட பின்னர் அரசியல் சேறு பூசுவது தவறு - பொன்சேகா

முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு அரசியல் ரீதியில் சேறு பூசி பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது என பீல்ட் மார்சல் சரத்பொன்சேக எம்.பி. தெரிவித்தார்.

மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான விசாரணையின் பின்னர், பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்பு இல்லையென அறிக்கை வெளியாகியுள்ளமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

விசாரணைகளின் பின்னர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதின் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டிருப்பதாயின் அரசியல் ரீதியில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீது சேறு பூசுவது அர்த்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வீடியோ: 
ரிஷாட் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட பின்னர் அரசியல் சேறு பூசுவது தவறு - பொன்சேகா ரிஷாட் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட பின்னர் அரசியல் சேறு பூசுவது தவறு - பொன்சேகா Reviewed by NEWS on July 06, 2019 Rating: 5