ஹக்கீம் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - ஹரீஸ்

கல்முனை, தோப்பூர் மற்றும் வாழைச்சேனை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரையில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் அமைச்சு பதவிகளை ஏற்கப் போவதில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பில் நேற்று முன்தினம் (29) இரவு கல்முனையில் கூட்டமொன்று இடம்பெற்றதோடு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அமைச்சு பொறுப்புக்களை ஏற்க கூடாது என தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறினார். கல்முனை, தோப்பூர், வாழைச்சேனை பிரதேச செயலகம் தொடர்பில் இறுதித் தீர்வு காணப்பட வேண்டும். திகன, மினுவாங்கொட, குருநாகல் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது போன்று விடயங்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் பட்சத்திலே அமைச்சுப் பதவிகளை ஏற்போம் எனவும் குறிப்பிட்டார்.

கல்முனை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் குறித்து வினவியதற்கு பதிலளித்த அவர் அது பற்றித் தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினார்.
ஹக்கீம் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - ஹரீஸ் ஹக்கீம் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது - ஹரீஸ் Reviewed by NEWS on July 31, 2019 Rating: 5