கஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை

பாதாள உலகக் கும்பலின் பிரபல உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

5.3 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருளை கடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாக்கந்துர மதுசின் பிரதான சகாவான கஞ்சிப்பான இம்ரான் டுபாயில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின் போது மாக்கந்துர மதுசுடன் சேர்த்து டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(அ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...