வேற்பாளர்களை அறிவித்த பின்னரே நாங்கள் முடிவு எடுப்போம் : மு.கா

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்ததன் பின்னர் வேட்பாளருக்கு வெற்றி பெறுவதற்குள்ள பலம் மற்றும் அவரது கொள்கை விளக்கம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு தமது கட்சியின் ஆதரவு குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்று (04) மாலை கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...