எட்டம்பிடிய காட்டுத்தீயை அணைக்க 20 விமானப் படையினர்..!
எட்டம்பிடிய, பனன்கல காட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்காக அப்பகுதிக்கு இடர் முகாமைத்துவ குழு மற்றும் தியதலாவ விமானப்படை பிரிவை சேர்ந்த 20 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பண்டாரவெல, மாதெட்டில்ல கல்வடுதென்ன காட்டுப் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ இவ்வாறு பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தீயினால் கல்வடுதென்ன காட்டுப் பகுதியின் 50 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

யாராவது ஒருவரினாலோ அல்லது குழு ஒன்றினாலோ குறித்த பகுதிக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

குறித்த காட்டுப் பகுதியை சூழ்ந்து வீடுகளும் மின்சார கம்பங்களும் இருப்பதனால் அப்பகுதிக்கான மின் துண்டிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பண்டாரவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...