ஐக்கியதேசிய முன்னணி என்ற கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும்..!


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட வேண்டும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று (20) இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்
பிரதான மூன்று கட்சிகளிடையே வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் இது கட்சிக்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவாகும் . 

எமது மக்களின் இருப்பையும் சமூகத்தின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக்கூடியதாக எதிர்வரும் ஜனாதிபதி இருக்க வேண்டும் என்பதை தோட்டத்தொழிலாளர்கள் சமூகம், உள்ளிட்ட சிறுபான்மையும் விரும்புகிறது .

இதனை செய்ய வேண்டுமாக இருந்தால் ஐக்கிய தேசிய முண்ணனி ஊடாக சிறந்த வேட்பாளரை நிறுத்தி பொது மக்கள் சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். 


இதில் மக்கள் விடுதலை முண்ணனி கட்சியினால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு எவ்வித திட்டங்களும் இல்லை பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு வீதியில் இறங்கி போராடுவதையே சொல்லிக் கொடுக்கிறார்கள்.

நடை முறையில் எதையும் செய்ததில்லை இளைஞர்கள் ஏமாற வேண்டாம்.
இதனை சிந்தித்து செயல்பட  வேண்டும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபாலசிறிசேன 51.13 வீதமான வாக்குகளை பெற்றுள்ளார் இதில் திருகோணமலை மாவட்ட வாக்குப் பதிவுகள் 2.23 வீதமாகும் 

எமது மாவட்ட மக்களின் பங்கு அளப்பறியது ஆனால் தற்போதைய ஜனாதிபதி எம்மை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் தொடர்பில் நான்கு வருடகாலமாக ஏமாற்றியுள்ளார். 

எனவே எதிர் வரும் தேர்தல் மக்களின் சக்தியாகவும் சிறுபான்மையினரின் முடிவிலும் தங்கியிருக்க வேண்டும் என்றார்.


ஐக்கியதேசிய முன்னணி என்ற கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும்..! ஐக்கியதேசிய முன்னணி என்ற கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும்..! Reviewed by NEWS on September 20, 2019 Rating: 5