புர்கா, நிகாப் தடை நீக்கப்பட்டமைக்கு மஹிந்த தரப்பினர் கடும் எதிர்ப்பு..!புர்கா, நிகாப் மற்றும் முகத்தை மறைக்கும் தலை கவசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டமைக்கு மஹிந்த தரப்பினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

தேர்தலை இலக்கு வைத்து, நம்மைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டது. எனினும் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதனை தொடர்ந்து இந்த தடை நீக்கப்பட்டமை மிகப்பெரிய தவறாகும். தேர்தலுக்காக எடுக்கப்பட்ட இந்த செயற்பாடு ஆபத்தானது.

சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக பாதுகாப்பு குறித்து சிந்திக்காமல், தடை நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புர்கா, நிகாப் தடை நீக்கப்பட்டமைக்கு மஹிந்த தரப்பினர் கடும் எதிர்ப்பு..! புர்கா, நிகாப் தடை நீக்கப்பட்டமைக்கு மஹிந்த தரப்பினர் கடும் எதிர்ப்பு..! Reviewed by NEWS on September 22, 2019 Rating: 5