உத்தியோகபூர்வ அறிவிப்பு : சஜித் பிரேமதாசவே வேட்பாளர்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச என மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளது

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஏனைய செயற்குழு உறுப்பினர்களின் கூட்டும் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது இதன் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

தேர்தலில் முன்வைக்கப்பட வேண்டிய கொள்கைகளை இங்கு பிரதமர் ரணில் விளக்கினார்.அந்த கொள்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு அனைவரும் கூட்டாக செயற்பட வேண்டுமென இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்சி பிளவுபடாமல் இருக்க இந்த முடிவை எடுத்ததாக பிரதமர் ரணில் இங்கு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்