பிரதான செய்திகள்

கிண்ணியா கற்குழி விளையாட்டு மைதானத்துக்கான பார்வையாளர் அரங்கு திறப்பும் உதைப் பந்தாட்ட இறுதிப் போட்டியும்..!

கிண்ணியா கற்குழி விளையாட்டு மைதானத்துக்கான புதிய பார்வையாளர் அரங்கு நேற்று (22)துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார வேட்பாளர் ஜௌபர் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான டாக்டர் ஹில்மி முகைதீன்பாவா அவர்கள் விசேடமாக கலந்து சிறப்பித்தார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிரதியமைச்சரின் கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபா செலவில் இப் பார்வையாளர் அரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கிண்ணியா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியும் இன்றைய தினம் இம் மைதானத்தில் இடம் பெற்றுள்ளது..இரு அணிகள் ஒன்றையொன்று எதிர்தாடியது அடப்பனாவயல் புளூபேர்ட்ஸ் மற்றும் சூரங்கல் கென்வூட் அணிகள் இறுதிச் சுற்றில் மோதியது 3:2 கோள்கள் என்ற கணக்கில் சூரங்கல் கென்வூட் அணியினர் சம்பியன் பட்டத்தை தன்வசமாக்கினர்...

இதற்கான கேடயங்களையும் பரிசுத்தொகையினையும் விசேடமாக பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன்பாவா வழங்கி வைத்தார்கள்..
2019 ம் ஆண்டின் KFL soccer king 7s க்கான சம்பியன் பட்டத்தை கென்வூட் அணியினர் தன்வதமாக்கினர் .20000 ரூபா ரொக்கப்பணமும் கேடயமும் வழங்கப்பட்டன ,இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு 15000 ரூபா ரொக்கப்பணமும் கேடயமும் வழங்கப்பட்டுள்ளன. 

இதில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.மஹ்தி,நிஸார்தீன் முஹம்மட்,பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் மற்றும் வட்டார வேட்பாளர் ஹாதி உதைப்பந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
News
News

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget